கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மக்கள் அவதி
கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கு கண்டி, கெலிஓயா நகரில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதனால், அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. அத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து, கரையோரப் பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கெலிஓயா நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.