மட்டக்களப்பில் 4 அடி உயரத்துக்கு பாய்ந்தோடும் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு
பல குளங்களில் வெள்ள நீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கவுகள் அந்தந்த நீர் மட்ட அளவுகளுக்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கத்தால் நேற்று இரவு மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
மேலும் கடல் கொந்தளித்து வருகின்ற நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, தும்பங்கேணி, றூகம், கட்டுமுறிவு, வாகனேரி, வெலிகந்தை, வடமுனை, புனானை, மாவடி ஓடை போன்ற குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து உன்னிச்சை குளத்தின் இரு வான் கதவுகள் 3 அடிக்கும் ஒரு வான்கதவு 4 அடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய குளங்களின் வான் கதவுகள் அந்தந்த குளத்தின் நீர் மட்டத்துக்கு அமைவாக திறந்து விடப்பட்டுள்ளது
வெள்ளத்தால் தாழ் நிலப்பகுதிகள் மற்றும் நெல் வயல்கள் வெள்ளநீரில் மூழ்கிவருகின்றதுடன் கிரானுக்கும் புலிபாந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்தின் ஊடாகவும் வெள்ள நீர் 4 அடி உயரத்திற்கு பாய்ந்து வருவதால் அந்த பகுதிகளுக்கான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
யாழில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மீது தாக்குதல்; இலங்கை வரை தொடர்ந்த ஆலய பிரச்சனை! வெளிவந்த உண்மைகள்
இவ்வாறு வவுணதீவு மட்டக்களப்பை இணைக்கும் வலையிறவு பாலத்தில் நீர் மட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த பகுதிக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அதனை அண்டிய பகுதி மக்கள் கவனமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.