வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை தாழ் நிலப் பிரதேசங்கள்
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் இன்று (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி ,தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்துக்கு தடையான வீதிகள் தொடர்பிலும் உடனடியாக நீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனால் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை குறித்த வீதியின் ஊடாக செல்வதன் ஊடாக எதிர் நோக்கினர்.
