வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்!
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹா ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்மட்டம் அதிகரிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மஹா ஓயா பகுதியில் பராமரிக்கப்படும் ஆற்று மானிகளின் நீர் மட்டப் ஆய்வு மற்றும் மழை நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.