விமானங்களில் பயணம் செய்யும்போது இந்த பானங்களை குடிக்காதீங்க: எச்சரிக்கை தகவல்!
விமானங்களில் பயணம் செய்யும்போது, நமக்கு பல்வேறு பானங்களை வழங்குவார்கள். இதில், டீ மற்றும் காபி ஆகிய பானங்களை அருந்துவது மிகவும் ஆபத்தானது.
எனவே அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்யும்போது, டீ மற்றும் காபி ஆகிய பானங்களை நீங்கள் ஆர்டர் செய்வதாக இருந்தால், ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக யோசித்து கொள்ளுங்கள்.
விமானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என அங்கு வேலை செய்து வரும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால் இதற்கு கூட விமானங்களின் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர்.
அதற்கு பதிலாக ஹேண்ட் சானிடைசர்களை (Hand Sanitiser) பயன்படுத்தி கொள்ளலாம் என அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதன் காரணமாகவே விமானத்தில் டீ மற்றும் காபி ஆகிய பானங்களையும் தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர். தண்ணீர் தேவைப்படுகிறது என்றால், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து.
ஒரு சில விமான நிறுவனங்களின் தண்ணீரில், ஈ.கோலை (E.coli) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாக்டீரியா (Bacteria) வயிற்றுபோக்கு உள்பட பல்வேறு உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்த கூடியது. விமானத்தில் டீ மற்றும் காபி ஆகிய பானங்களை தயாரிப்பதற்கு, டேப் வாட்டர் (Tap Water) பயன்படுத்தப்படும். அந்த தண்ணீரில்தான் பிரச்னை.
டேப் வாட்டரை குடித்த காரணத்தால், விமானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரே, கடந்த காலங்களில் பலமுறை உடல்நல பிரச்னைகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே விமான ஊழியர்கள் எப்போதும் பாட்டில்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பருகுவதைதான் வழக்கமாக வைத்துள்ளார்களாம்.
டீ மற்றும் காபி போன்ற பானங்களை தயாரிப்பதற்கு முதலில் தண்ணீரை கொதிக்க வைப்பார்கள். எனவே அந்த சமயத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் உயிரிழந்து விடுமே? என்று உங்கள் மனதில் சந்தேகம் எழுவது எங்களுக்கு புரிகிறது. இது அனைவரின் மனதிலும் இயல்பாகவே எழக்கூடிய சந்தேகம்தான்.
தண்ணீரை கொதிக்க வைக்கும்போது பாக்டீரியாக்கள் உயிரிழந்து விடும் என்பதால், அதன் மூலமாக தயார் செய்யப்படும் பானம், அருந்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது என்பது பலரின் கருத்தாக உள்ளது.
ஆனால் தண்ணீரை கொதிக்க வைப்பதால், பெரிதாக மாற்றங்கள் ஏற்படாது என்பது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.
''இது ஒரு சில நுண்ணுயிரிகளை கொல்ல கூடும். இறந்து போகக்கூடிய நுண்ணுயிரிகள் எளிதில் பாதிக்கப்பட கூடியவை. எனவே அவை எளிதாக இறந்து விடும். ஆனால் பெரும்பாலான நுண்ணுயிரிகள் உயிரிழக்காது'' என்பது அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்து. எனவே கூடுமான வரை விமான பயணத்தின்போது டீ, காபி குடிப்பதை தவிர்ப்பது நல்ல முடிவாக இருக்கும்.
ஆனால் ஒரு சில விமான நிறுவனங்கள், தங்களின் விமானங்களில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் மிகவும் சுத்தமானவை என தெரிவிக்கின்றன. அதேபோன்று விமான பயணத்தின்போது டீ மற்றும் காபி ஆகிய பானங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட கூடிய தண்ணீரும், அருந்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதுதான் எனவும் அவை கூறியுள்ளன.
அத்துடன் விமானங்களில் இருக்க கூடிய தண்ணீர் தொட்டிகளை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதாகவும், இந்த பணிகளுக்கு அதிநவீன கிருமி நீக்க செயல்முறைகளை பயன்படுத்தி வருவதாகவும், ஒரு சில விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விமான நிறுவனங்கள் தரப்பிலும், இது தொடர்பாக முறையான விளக்கம் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
அதுவரை விமான பயணத்தின்போது டீ மற்றும் காபி ஆகிய பானங்களை குடிப்பதை தவிர்த்து விடுவதுதான் நல்லது.
விமானத்தில் டீ மற்றும் காபி ஆகிய பானங்களை குடிப்பதற்கு பின்னால் இருக்கும் பிரச்னைகள் ஒரு சிலருக்கு தற்போதுதான் தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள், வீடுகளில் குடித்தாலும் கூட, விமானத்தில் டீ, காபி பருகுவதை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.