வாட்ஸ்அப்பில் வரவுள்ள ஐந்து புதிய அப்டேட்கள்
வாட்ஸப்பில் புதிதாக ஐந்து அப்டேட்கள் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை விரைவில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது மெட்டா (META) நிறுவனம்.
வாட்ஸ்அப் பயனாளர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் வசதி இது. இப்போது வாட்ஸ்அப் வெப் வெர்ஷனை பயன்படுத்த ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் இணைப்பு தேவையாக இருக்கிறது.
தற்போது வரவுள்ள புது அப்டேட் மூலம் வாட்ஸப் வெப் வெர்சனை நான்கு டிவைஸ்களில், தொலைபேசியில் இணைய வசதி இல்லாமலே பயன்படுத்த கூடிய வகையில் அமையவுள்ளது.
வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ் தானாக அழியும் வசதி கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த வசதியைப் பயன்படுத்தினால் ஒரு மெசேஜ் 7 நாள்களில் அனுப்பியவர், பெறுபவர் என இரண்டு பக்கங்களிலுமிருந்து மறைந்து விடும். தற்போது வரப்போகும் அப்டேட் மூலமாக 7 நாள்கள் என்பதுடன் சேர்த்து 24 மணி நேரம், 90 நாள்கள் என்ற கால அளவுகளை கூடுதலாகக் கொடுக்கவிருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப் செட்டிங் பகுதியில் லாஸ்ட் சீன், ஃப்ரொபைல் போட்டோ, விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்கும் வசதி இருக்கிறது. இதில் புதிதாக குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களிடமிருந்து தனிப்பட்ட விவவரத்தை மறைக்கும் அப்டேட் வரவுள்ளது.
வாட்ஸப்பில் அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒன்று தான் வாய்ஸ் மெசேஜ். முன்பு வாய்ஸ் மெசேஜ் சென்ற பிறகு தான் நாம் என்ன பேசி உள்ளோம் என்பதை கேட்க முடியும். ஆனால் தற்போதைய அப்டேட்டில் மெசேஜ் செல்லும் முன்பே நாம் கேட்கக்கூடிய வசதி கொண்டுவரப்பட உள்ளது.
வாட்ஸ்அப் கம்யூனிட்டி என்பது இருக்கும் வசதிகளை மேம்படுத்துவது போல இல்லாமல் புதிதாக கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் கம்யூனிட்டி வசதி மூலமாக பல்வேறு குரூப்களை ஒன்றாக இணைத்து ஒரே கம்யூனிட்டியின் கீழ் வைத்துக்கொள்ள முடியும். இது அட்மின்களின் வேலையை எளிதாக்கும் மேலும் கூடுதலான நபர்களிடையே செய்தியைக் கொண்டு சேர்க்கும்.