அரசாங்கத்தில் இணையவுள்ள மேலும் ஐந்து சுதந்திர கட்சி எம்.பிக்கள்!
புதிய அரசாங்கத்துடன் சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தனக்குத் தெரியாது என முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ( Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
மேலும், தான் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake), லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna), ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எஞ்சிய 4 பேரில் மூவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவலால் தெரிவிக்கின்றன.