தெற்கு கடற்பரப்பில் பெரும் தொகை போதைப்பொருளுடன் ஐவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Navy
Crime
Drugs
By Sahana
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பலநாள் மீன்பிடி படகொன்றில் கடத்தப்பட்ட பெரும் தொகையிலான போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
படகில் இருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்றினால் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போதைப்பொருள் கடத்தல் சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்புடையதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US