விகாரை ஒன்றின் தலைசுற்றவைக்கும் ஒருமாத மின்கட்டணம் தொகை!
கொழும்பிலுள்ள விகாரை ஒன்றிற்கு ஒரு மாதத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , மத ஸ்தலங்களின் மின் பாவனை விடயத்தில் அரசு தலையிட வேண்டும் என்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .
கடந்த மாதம் குறித்த விகாரையின் மின்கட்டணம் 80,000 ரூபா என தெரிவித்த அவர், கொழும்பு 7ல் உள்ள தனது 35 அறைகள் கொண்ட ஹோட்டலின் மாதாந்த மின்சார பாவனை 7,500 அலகுகளே எனவும்அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அதிகளவு நுகர்வு உள்ள இடங்களுக்கு 5 இலட்சத்திற்கு மேல் மின்கட்டணம் பெறுவதைத் தடுக்க முடியாது எனத் தெரிவித்த ரத்நாயக்க, விகாரைகளுக்கு மானியம் வழங்குவது அரசாங்கத்தின் விவகாரம் எனவும் தெரிவித்தார்.
மேலும் முழு நாட்டிலும் உள்ள 48,500 மத வழிபாட்டுத் தலங்களில் 75 வீதமானவை 180 யூனிட்டுக்கும் குறைவான மின்சார பாவனையைக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 25 வீதமான மத ஸ்தலங்களுக்கே மின்கட்டண அதிகரிப்பு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.