கடலில் தத்தளித்த மன்னார் மீனவர்கள்; மீட்ட இந்திய கடற்படை
கடலில் தத்தளித்த மன்னார் மீனவர்கள் இந்திய கடற்படையினால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 23 ஆம் திகதி மன்னார் - சவுத்பார் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர்களின் படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் இருவரும் மன்னார் – சவுத்பார் பகுதியில் இருந்து தமது டிங்கி படகில் கடற்றொழிலுக்கு சென்று கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களைத் தேடும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கடற்றொழில் திணைக்களத்தினரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது.
மீனவர்கள் காணாமற்போனமை குறித்து இந்தியாவிற்கும் அறவிக்கப்பட்டது. இதனையடுத்து, மீனவர்கள் இருவரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் இந்திய கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று காலை மீனவர்கள் இருவரும் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.