கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள்
ஒரு மாதத்திற்கும் மேலாக அலைக்கழிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் ஆறு மீனவர்கள் இன்று (19) அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடற்படையினர் இன்று காலை பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வாசெய்தி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
காணாமல் போன கப்பலைக் கண்டுபிடிக்கும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காக மாலைத்தீவு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
நேற்று (18) காலை கடற்படையினர் தமது தொடர்பாடல் முறையை சரிசெய்து கடற்படைத் தலைமையகத்தைத் தொடர்புகொண்டுள்ளனர்.
கடற்படையினரின் கூற்றுப்படி, மாலுமிகளை கரைக்கு கொண்டு வருவதற்காக A521 என்ற துணைக் கப்பல் அனுப்பப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.