தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த அசம்பாவிதம் ; தீவிரமாகும் விசாரணை
வவுனியா மாமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடுவ குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாமடுவ குளத்தில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாமடுவ பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் மாமடுவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தோணி ஒன்றின் உதவியுடன் மாமடுவ குளத்தில் மீன்பிடிக்கச் சென்று, மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.