நாட்டில் மீன்களின் விலையில் திடீர் அதிகரிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், சந்தைகளில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் பெரும்பாலான கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்றும், இதன் விளைவாக மீன் வரத்து குறைவடைந்துள்ளதால் விலைகள் உயர்ந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (04) பேலியகொட மத்திய மீன் சந்தையில் ஒரு கிலோகிராம் சலாயா ரூ.1,000, லின்னா ரூ.1,200, கெலவல்லா ரூ.1,600 மற்றும் தோரா ரூ.3,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, சந்தைக்கு மீன் வரத்து குறைந்துள்ளதால் சில்லறை சந்தைகளிலும் மீன்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.