சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் வழக்கு ; சட்டத்தரணி குருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் வழக்கு தொடர்பில் சட்டத்தரணி குருபரன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் வழக்கு வவுனியா மாநகர முதல்வரின் இடைக்காலக் கட்டளை வந்ததன் பின்னர் தான் தாக்கல் செய்யப்பட்டது என்பது பச்சைப் பொய் என்றும் . அதற்குப் பல மணி நேரம் முன்னதாக அது தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

காலக்கொடுமை......
கடுமையான முயற்சியின் பின்னர் தனி நபர் விசாரணை அதிகாரியின் அறிக்கையைத் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறும் வரை காத்திருந்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனப் பிரபல சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் இன்று (04.07.2026) தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இரு வழக்குகளும் ஒரே மாதிரியானவை அல்ல.வவுனியாவில் கொடுக்கப்பட்டது என்பதற்காக யாழ்ப்பாணத்தில் கொடுபடும் என்ற உத்தரவாதம் இல்லை. நீதிமன்றங்கள் அவ்வாறு இயங்குவதில்லை. அதை அவர் அறிவார்.
ஆனால், அவரின் நிழலில் இயங்கும் அவரால் ஊக்குவிக்கப்படும் இயக்கப்படும் விசிலடிச்சான் குஞ்சுகளை அவர் வேண்டுமென்றே பிழையாக வழிநடத்துவது அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் ஊக்குவிப்பது தான் காலக்கொடுமை.
எனக்கு எனது சட்டத்தொழில் அரசியல் மூலதனமில்லை. ஆகவே, எனது நெஞ்சில் கனமில்லை எனவும் சட்டத்தரணி குருபரன் குறிப்பிட்டுள்ளார்.