பிக்பாஸ் வீட்டில் இதுவே முதல் முறை: பணப்பெட்டி எடுக்கொண்டு வெளியேறப் போறது யார்?
தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்
இந்த நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் சீசன் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தான் இந்த 6 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது 6 சீசன் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம்.
இவ்வாறான நிலையில், நேற்று நடந்த பணமூட்டை டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு வி.ஜே கதிரவன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது 5 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இதில் அசீம் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் தான் டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் இருவரில் யார் அந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களில் ஒருவராவது வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் அனுப்பப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் தற்போது 100 நாட்களைக் கடந்த விட்ட நிலையிலும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் கூட அனுப்பப்படவில்லை.
இதற்கு காரணம் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே அதிகளவிலான போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு விட்டனர். இப்படியொரு நிலையில் தற்பொழுது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் இரண்டாவது முறையாக பணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது
பிக்பாஸ் சீசன்களிலேயே இப்படி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால் யார் இந்த பணப் பெட்டியை எடுக்கப் போகின்றார்கள் என அனைவரும் ஆவலாக இருப்பதைக் காணலாம்.