ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்த முதல் நபர் சிக்கினார்! இனி யாராவது எங்காவது உள்ள இறங்குவியளா?
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்த முதல் நபர் என 38 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைப்புத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்து எதிராக மக்கள் போராடங்களை முன்னெடுத்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதன் பின்னர் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் , அரசாங்க உடமைகளை போராட்டம் எனும் பெயரில் சூறையாடியவர்கள் , முற்றுகையிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை வளைத்து வளைத்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.