வரலாற்று சாதனை ; அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர்
அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற வரலாற்றுச் சாதனையை மிச்சிகன் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed) படைத்துள்ளார்.
முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான அப்துல் எல்-சயீத், கடுமையான தேர்தல் போட்டிக்குப் பின்னர் குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்ஸை (Mike Rogers) தோற்கடித்து, மிச்சிகனில் செனட் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளார்.

செனட் உறுப்பினராகத் தெரிவான முதல் முஸ்லிம்
இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் செனட் உறுப்பினராகத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். எகிப்திலிருந்து குடியேறிய ஒருவரின் மகனான எல்-சயீத், இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தல் மூலம் தெரிவான அரசியல் பதவியையும் வகித்ததில்லை.
அவர் பொதுச் சுகாதாரத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். அனைவருக்கும் சுகாதாரச் சேவையை உறுதிப்படுத்துதல், தேர்தல்களில் வெளிநிதி ஆதிக்கத்தைத் தடுத்தல் மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளைத் தீவிரமாக விமர்சித்தல் உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) உள்ளிட்ட முற்போக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்ற இவரது வெற்றி, 2028ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி அணியின் செல்வாக்கை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.