மத்தள விமான நிலையத்தின் ஊடாக முதல் சர்வதேச விமான சேவை!
மத்தள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக முதன்முறையாக நிலையான நேரஅட்டவணைக்கு அமைய விமான பயணங்களை முன்னெடுப்பதற்கு விமான நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஸ் ஏயர் (Wizz Air ) விமான சேவை நிறுவனமே அதற்கான இணக்கத்தை வழங்கியுள்ளது.
அதற்கமைய அபுதாபியில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் முதலாம் திகதி விமானப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதனடிப்படையில் நிலையான நேரஅட்டவணையின் கீழ், குறித்த விமான நிறுவனம் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தருமென இராஜாங்க அமைச்சர் ஏ.ச்சானக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்தகாலங்களில் தற்காலிக சேவைகளாகவே மத்தள விமான நிலையத்திற்கான விமான சேவைகள் இடம்பெற்றதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக மேலும் தெரிவித்துள்ளார்.