தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; எங்கு தெரியுமா?

Sulokshi
Report this article
நடிகர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாடு பொன்மலை ஜீ கார்னரில் தொடருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறுகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி நிராகரிப்பு
அதற்கமைய, குறித்த இடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் வாடகைக்குத் தருமாறு கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சிறுகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரும் தமது கட்சியின் முதல் மாநாட்டைத் திருச்சியில் நடத்தியிருந்த நிலையில், தற்போது அவர்கள் பாணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அங்கு இடம்பெறாவுள்ளதாக கூறப்படுகின்றது