கொழும்பில் இரு இடங்களில் தீ விபத்து
கொழும்பு - வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (10) ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆமர் வீதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து
அதேவேளை கொழும்பு - ஆமர் வீதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (10) ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.