புகையிரத பாதையை அண்டிய பகுதிகளில் தீப்பரவல் ; பெரும் பகுதிகள் நாசம்
மலையக புகையிரத பாதையின் ஹற்றன் மற்றும் ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில், 106 ¾ மைல் கல்லுக்கு அருகிலுள்ள இலுக்கு வனப்பகுதியில் நேற்று (26) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பிரதேசத்தில் நிலவும் கடும் வறண்ட வானிலையுடன், புகையிரத பாதையை அண்டியுள்ள தேயிலை தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அந்த பாதையினூடாக பயணிக்கின்றனர்.

வரட்சியான காலநிலை
அவ்வாறு பயணித்த எவரேனும் இந்த வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மலையகத்ததில் தொடரும் வரட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது.
இதேவேளை தலவாக்கலை , நானுஓயா, ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பிரதேசங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு கடந்த நாட்களில் ஏற்படும் தீ பரவலினால் பல ஏக்கர் காடுகள் எரிந்தது தொடர்ந்து இவ்வாறு தீ வைக்கும் செயல் இடம்பெற்று வருதால் நீரேந்தும் பகுதிகளில் நீர் வற்றி காணப்படுகின்றது.