சூரிய பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்களுக்கு பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தலைமைத்துவம், அதிகாரம், ஆன்மா, தந்தை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கலாம். அதுவும் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சூரிய பெயர்ச்சியால் பணப் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியக் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கி அவதிப்படக்கூடும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மோசமாக இருக்கும். பணியிடத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். இலக்குகளை அடைய வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் பண விஷயத்தில், அதுவும் பண பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும். முக்கியமாக பண பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும். திட்டமிடப்பட்ட வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வேலையில் நிறைய சவால்கள் எழும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மனக்கசப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பேச்சை கட்டுப்படுத்தி, எந்த வேலையையும் அவசரமாக செய்யாமல் பொறுமையாக செய்ய வேண்டும். தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போகலாம். சொத்து தொடர்பான ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக யோசித்த பின் எடுங்கள். முக்கியமாக இக்காலத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.
