மசாஜ் சேவை என்ற போர்வையில் நிதி மோசடி ; பெண் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது
கொழும்பு மசாஜ் சேவை என தெரிவித்து நிதி மோசடி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மசாஜ் செய்து தருவதாக கூறி நபர் ஒருவரை அழைத்து வந்து தாக்கி கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபாவை இணைய வங்கிச்சேவை மூலம் பெற்றுக் கொண்டனர்.
மேலதிக விசாரணை
பின்னர் பணப்பையில் இருந்த 15,000 ரூபா திருடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 54 வயதான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.