பாரிய நிதி மோசடி... கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை அதிரடி கைது!
நாட்டில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பல நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவரிடம் இருந்து 63,818,452 ரூபாவை பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளாமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதான பெல்ஜிய பிரஜை என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.