ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் இந்த சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். முக்கியமாக இது இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சியாகும்.
குரு பகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது 2026 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

கடின உழைப்புக்கான பலன்
மேஷம்: மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு, உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிட்டும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் திடீர் லாபம் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் நல்ல வெற்றியைப் பெறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பேச்சால் பல முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி: கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்ங்கள் கிடைக்கலாம். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்: மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல செய்தியைப் பெறலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.