யாழில் நடந்த சண்டைகள் ; கடுமையாகத் தாக்கப்பட்ட அகதிமுகாம்
ஏழாயிரம் அகதிகள் வரையில் தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்திய படையினர் கொடூர தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அதன்போது அகதிகள் முகாமின் முன்னதாக வந்து நின்ற இந்திய படையினரின் யுத்தத் தாங்கி ஒன்றின் மூலம் அந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
குறித்த தாக்குதலில் முகாமில் தங்கியிருந்த 24 அகதிகள் துடிதுடித்து ஸ்தலத்திலேயே மரணித்தார்கள்.
இந்தியப்படையினரின் முற்றுகையிலேயே இந்த முகாம் அன்றைய இரவு முழுவதும் இருந்தது. தொடர்ந்தும் அகதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற பயத்துடனேயே மறுநாள் காலை விடிந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் இந்தியப்படையினரிடமிருந்து அகதிகளின் உயிர்களை காப்பாற்றும் திட்டத்துடன், முகாமில் தங்கியிருந்த ஒரு பெரியவர் கிளம்பினார்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்.......