கண் புருவங்களில் திடீரென முளைத்த பல் ; 16 வயது சிறுவனுக்கு பரிசோதனையில் காத்திருந்த ஷாக்
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனின் கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் பற்கள் வளர்ந்திருக்கும் அரிய மருத்துவச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுவனின் இடது கண்ணுக்கு மேலே சிறிய அளவில் வீக்கம் ஏற்பட்டு, வலி எதுவும் இல்லாததால் அதனைப் பெற்றோர் ஆரம்பத்தில் சாதாரண கட்டியாகக் கருதியுள்ளனர்.

அறுவை சிகிச்சை
நாட்கள் செல்லச் செல்ல அங்கிருந்து இரண்டு கடினமான வெள்ளை நிறக் கட்டிகள் வெளியே தெரியத் தொடங்கவே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனையில் கண் இமைக்கு மேல் புருவத்தை ஒட்டி ஒரு பல் முழுமையாகவும், மற்றொரு பல் பாதியளவும் வளர்ந்திருப்பது கண்டு மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மருத்துவ வரலாற்றில் கண் குழியில் அல்லது கண் இமைக்குப் பகுதியில் பல் வளர்வது இதுவே முதல் முறை என்று நிபுணர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அந்தப் பற்களை அகற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.