தமிழர் பகுதியொன்றில் அதிரடி கைதான பெண் பொலிஸ் உயர் அதிகாரி ; சக அதிகாரிக்கு செய்த செயல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் பேரில், நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி ஒருவரும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கான பரிந்துரையை வழங்குவதற்காக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ரூ.72,000 பணத்தை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வைத்து, அங்கிருந்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.