செம்மஞ்சள் நிற உடையுடன் சபைக்கு வந்த பெண் எம்பிக்கள்; குழப்பமடைந்த அவைத்தலைவர்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாட்களாக நடைபெற்று வரும் பிரசாரத்தை குறிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தின் அனைத்து பெண் உறுப்பினர்களும் செம்மஞ்சள் நிற சேலையுடன் இன்று சபைக்கு வருகைத் தந்துள்ளனர்.
அதன்படி மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவும் செம்மஞ்சள் நிற சேலையுடன் இன்று சபைக்கு வருகைத் தந்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதே நிறத்திலான கைப்பட்டிகளையும் அணிந்து வந்துள்ளனர்.
அவைத்தலைவர் சந்தேகம்
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை முறை தொடர்பில் அவதானித்த அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பில் வினவினார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை முறைக்குப் பின்னால் ஏதாவது சிறப்பு இருக்கிறதா என்று வினவினார்.
இதன்போது பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியே இந்த ஆடைமுறை என விளக்களித்ததாக கூறப்படுகின்றது.