வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் பந்தாடப்படும் பெண் உத்தியோகஸ்த்தர்!
வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் முறைகேடுகளை , பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் அம்பலப்படுத்திய காணொளி அண்மையில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் உண்மைகளை அம்பலப்படுத்திய கல்வித் திணைக்களத்தில் இருந்து மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
லீலைகள் பல அம்பலமாகிவிடும்
திணைக்களத்துக்குள் நடந்த, நடக்கின்ற முறைகேடுகள் தொடர்பில் அண்மையில் அம்பலப்படுத்தி இருந்த நிலையில் அவரை, உயர் அதிகாரிகளின் செல்வாக்கினோடு இவ்விடமாற்றத்தை வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண் உத்தியோகஸ்தர் மாகாணத்தில் இருந்தால் தனது லீலைகள் பல அம்பலமாகிவிடும் என கருதியே பெண் உத்தியீகஸ்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை வட மாகாணத்தில் பல முறைகேடுகள் இடம் பெறுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தனக்கு எதிரானவர்களை பழிவாங்கும் படலத்தை வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.