பிக்பாஸில் இருந்து வெளியேறும் பெண் போட்டியாளர்! வாங்கிய சம்பளவு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
இந்த நிகழ்ச்சியானது ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து தற்பொழுது 55 நாட்களைத் தாண்டியுள்ளது. இந்நிகழ்ச்சி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றது.
மேலும் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை வெளியேறியிருந்தார். இதனால் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.
இதன்படி குறைவான வாக்குகளை பெற்று குயின்சி தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் சிலருக்கு குயின்ஸி வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக தான் உள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி ஒரு வாரத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இது தொடர்பில் சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.