தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் பலி
கம்பளை பகுதியில் வீட்டிக்குள் ஏணியிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கி, 3 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கம்பளை, நாரன்விட்ட - ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
வீட்டினுள் பொருட்கள் வைப்பதற்காக பலகையில் அமைக்கப்பட்டிருந்த பரணில் ஏறி, தமது உந்துருளியை கழுவுவதற்கு தண்ணீர்க் குழாய் ஒன்றை எடுப்பதற்காக தந்தை மேலே ஏறியுள்ளார்.
மேலதிக விசாரணை
அந்தச் சந்தர்ப்பத்தில், தந்தைக்குப் பின்னால் சென்ற சிறுவன், கீழே நின்று தந்தையை பார்த்தபடி இருந்துள்ளான்.

இதன்போது, ஏணியிலிருந்த நிலைதடுமாறிய தந்தை, நேரே கீழே நின்றுகொண்டிருந்த தனது பிள்ளையின் மீது விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் உடனடியாக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த தந்தை கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.