வீதியில் வங்கி அதிகாரியான பெண் செய்த மோசமான செயல்; CCTV கேமராவில் பதிவான காட்சிகள்
வீதி நாய்களைத் தடிகளால் தாக்கியும், மோட்டார் சைக்கிளால் மோதித் தள்ள முயன்றும் விலங்கு வதைத் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட வங்கி அதிகாரியான பெண் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக மகரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மகரகம, பத்திரகொட வீதியில் வசிக்கும் பல்கலைக்கழக பட்டதாரியும், அரச வங்கி ஒன்றின் நிறைவேற்று தர அதிகாரியுமான பெண் ஒருவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

CCTV கேமராவில் பதிவான காட்சிகள்
மகரகம, பத்திரகொட வீதிப் பகுதியிலே குறித்த பெண் அதிகாரி நாய்களை தாக்கியதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெசக் பௌர்ணமி தின இரவிலும் அதிகாலை வேளையிலும், அந்தப் பகுதியில் இருந்த வீதி நாய்களைச் பெண் தாக்கும் காட்சிகளும், அவற்றை மோட்டார் சைக்கிளால் மோதித் தள்ள முயலும் காட்சிகளும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பெண், எதிர்வரும் 10ஆம் திகதி கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.