போர் பதற்ற அச்சம் ; மீண்டும் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள்
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று (28) இரவு முதல் மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை நகரத்தின் லிங்கநகர், கிண்ணியா, மூதூர் மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் தீவிர போர்ப் பதற்ற நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் முன்கூட்டியே எரிபொருளைச் சேமித்து வைக்கும் நோக்கில் மக்கள் இவ்வாறு திரண்டுள்ளனர்.
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இருப்பினும், சர்வதேச ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் தூண்டப்பட்ட இந்த அச்சம், இயல்பு நிலையைப் பாதிக்கும் வகையில் வரிசைகளை உருவாக்கியுள்ளது.