டாட்டூ கலைஞருக்கு எமனாக மாறிய தந்தை ; உயிரை பறித்த கத்தரிகோல்
காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் மகனை தந்தை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கைகலப்பு
காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ஒருவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மகன் டாட்டூ கலைஞர்.
தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு முற்றிய நிலையில் மகன் திடீரென வீட்டில் இருந்த கத்திரிக்கோலை கொண்டு வந்து தந்தையை குத்த முயன்றார்.
இதை தடுத்த தந்தை கத்திரிக்கோலை பறித்து மகனை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மகன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாஞ்சி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.