கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை ; பீர் போத்தலால் மகன் நிகழ்த்திய கொடூரம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான தொழிலாளி ஒருவர் அவரது 17 வயது மகனால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்லூரியில் படித்து வரும் குறித்த மாணவன் கல்லூரிக்கு சரிவர செல்லாததால் அந்த தொழிலாளி தனது மகனை கண்டித்துள்ளார்.

கடுமையான வாக்குவாதம்
இதுதொடர்பாக இரவு தந்தை-மகன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த மகன், அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தையை சிறுவன் பீர் பாட்டிலால் தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.