12 வயது சிறுமியை காதலித்த இளைஞருக்கு தந்தை செய்த கொடூர சம்பவம் ; பறிபோன உயிர்
பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தில், 12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் ஒருவரை, சிறுமியின் தந்தை இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவருடன் பழகி காதலித்து வந்துள்ளார்.

கொடூர சம்பவம்
இந்த விபரம் சிறுமியின் தந்தைக்குத் தெரியவந்தது. தனது மகளுடன் கல்லூரி மாணவர் பழகுவதை அறிந்து ஆத்திரமடைந்த தந்தை, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் தந்தை இரும்பு ராடால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது இடது மார்பில் பலமாகக் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இக்கொலைச் சம்பவத்தை செய்துவிட்டு தப்பியோடிய சிறுமியின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.