காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி; கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
தமிழ்நாடு விழுப்புரம் வானூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் வானூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ சாஸ்திரி. இவரின் மகள் விகாசினி. இவருக்கு வயது 13. விகாஷினி ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி விட்டில் தங்கி படித்து வந்தார். அப்போது அவர் ஒருவரை காதலித்ததாக தெரிகிறது.

தந்தை அறிவுரை கூறியும் அவர் காதலை கைவிடவில்லை. இதனால் மகளை தனது டி.பரங்கிணி கிராமத்திற்கு அழைத்துச் சென்று படிப்பை தொடர வைத்திருக்கிறார் தந்தை சிவசாஸ்திரி.
அதன் பின்னரும் சிறுமி காதலை கைவிடாததால் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி மகள் விகாசினியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.