வாடகை கொடுக்க முடியவில்லை ; மனைவியையும் மகளையும் வீட்டு உரிமையாளரிடம் கொடுத்த கணவன்; பல முறை பாலியல் வன்கொடுமை
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் மனிதநேயற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரேந்திரநகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பிழைப்பு தேடி மோர்பி பகுதிக்கு குடிபெயர்ந்து, மாத வாடகை ரூ.2,000 உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

பண நெருக்கடி
ஆனால், கடுமையான பண நெருக்கடி காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அவர்களால் வீட்டு வாடகையைச் செலுத்த முடியவில்லை.
வாடகை நிலுவைத்தொகை அதிகரித்ததால், அந்தப் பெண்ணின் கணவன் வீட்டு உரிமையாளருடன் ஒரு மனிதாபிமானமற்ற ஒப்பந்தத்தை செய்துள்ளான்.
வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவி மற்றும் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளருக்கு அவன் அனுமதி அளித்துள்ளான்.
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?
இதனைப் பயன்படுத்தி வீட்டு உரிமையாளர் அந்தப் பெண்ணையும், சிறுமியையும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தக் கொடூரம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்குத் தெரியவர, அவர் உடனடியாக மோர்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பொலிஸார் போக்ஸோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தத் செயலில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மூன்றாவது நபர் ஒருவரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.