விடிய விடிய போதை விருந்து ; வசமாக சிக்கிய பிரபல இசையமைப்பாளர் மகள்
கஞ்சா போதையில் ஆட்டம் போட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் உள்ள பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
பொலிஸார் சோதனை
அதன்படி சோதனை நடத்தியதில்,விருந்து முடிந்த பின்னர், சிலர் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்து தெரிய வந்தது
அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அனைவரும் அறையில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
பின் பொலிஸார் 3 பெண்கள், ஹோட்டல் மேலாளர் உட்பட 18 பேரை கைது செய்ததுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் வாட்ஸ் ஆப் குழு ஒன்றை அமைத்து மாதம் இருமுறை போதை விருந்தில் பங்கேற்று வந்ததும், கைது செய்யப்பட்ட 18 பேரில் ஒரு பெண் ‘ஆனந்தபுரத்து வீடு’ திரைப்படத்தின் இசையமைப்பாளரின் மகள் என்பதும், பெங்களூருவை சேர்ந்த இவர் சென்னையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 18 பேரையும் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.