12 வயதான மகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்: தாய் எடுத்த அதிரடி முடிவு
பொகவந்தலாவை பகுதியில் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 12 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் நேற்றைய தினம் (12-10-2023) அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டியாகல வத்தேகம கேகலன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத பல சந்தர்ப்பங்களில் தந்தையினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும், சிறுமி இதுபற்றி தனது தாயிடம் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் இது தொடர்பில் அட்டமலை பொலிஸில் சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் 3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.