நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபருக்கு நேர்ந்த கதி
மொனராகலை கும்பக்கன் ஓயாவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நபர் ஒருவர் காயமடைந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ உப லெப்டினன்ட் ஒருவரே இவ்வரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர்
கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த கிஹான் சஞ்சுல டி சில்வா (23) என்ற உப லெப்டினன்ட் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த போது செப்டெம்பர் 20ஆம் திகதி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.