தெற்கு அதிவேக வீதியில் கொடூர விபத்து ; இருவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொட்டாவ நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று அதே திசையில் சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தின் போது பின்புறமாக வருகை தந்த பாரவூர்தியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.