கீரி சம்பா அரிசி பதுக்கி வைப்பு ; விவசாயிகள் குற்றச்சாட்டு
பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசியை பதுக்கி வைப்பதாகவும் அதன் பிரதிபலனாக சந்தையில் அரிசி தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகவும் விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், கீரி சம்பாவுக்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதனூடாக வேறு மாப்பியா நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்று அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கீரி சம்பா அரிசியை பதுக்குவதாகவும் அதனால் சந்தையில் அரிசித் தட்டுப்பாடு தோற்றம் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கான அரிசி தேவைப்பாடு அவ்வாறு இல்லாவிட்டால் நெல் தேவைப்பாடு 15 – 10 சதவீதமாகவுள்ளது.
சந்தைகளில் 330 – 350 ரூபா என்ற அடிப்படையில் அதிக விலையில் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்கிறார்கள்.
இந்த விடயத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையும் அமைதியாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அரிசி விலையின் ஏற்ற இறக்கத்தினூடாக அதிக இலாபத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
இதனூடாக மீண்டும் செயற்கையாகவே சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.