அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியம் தொடர்பில் விவசாயிகள் குற்றச்சாட்டு
சிறுபோகத்திற்கான விளைச்சல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியம் இதுவரையிலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக பதினைந்தாயிரம் மெற்றிக் டன் உரம் தேவைப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறித்த உரத்தொகையானது ஒரு மாதத்துக்கு முன்பாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாறு உரிய காலப்பகுதிக்குள் உரம் வழங்கப்படாமையால் எதிர்பார்த்தளவு விளைச்சலைப் பெற முடியாது எனவும் விவசாய அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
மானிய விலையில் உரம் வழங்கப்படாமையினால் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.