வெள்ளப்பெருக்கில் அள்ளுண்டு செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்பு
அக்கரைப்பற்றில் வெள்ளப் பெருக்கில் அள்ளுண்டு செல்லப்பட்ட விவசாயி இன்று புளியம்பத்தை கிராமத்தின் முன்பகுதியில் உள்ள நரகக்குழி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் புளியம்பத்தை கிராமத்தை சேர்ந்த 57 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டவராவார். அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பட்டிமேடு வடக்கு பள்ளப்பாமங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நேற்று குறித்த விவசாயி அள்ளுண்டு செல்லப்பட்ட்டிருந்தார்.
இந்நிலையில் ஆற்றின் நடுப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக மீனவர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற உறவினர்கள் தோணியின் மூலமாக சடலத்தை ஆற்றின் கரையோரமாக கரை சேர்த்தனர்.
துரிசில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற துரிசில் பலகையை கழற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் விவசாயி வெள்லத்துடன் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடை மழையினால் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.