திடீரென சித்தார்த்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ரசிகர்கள்! காரணம் இதுதான்
நடிகர் சித்தார்த்திற்கு திடீரென கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த் தற்போது இந்திய சினிமா கவனிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார்.
முன்னணி நடிகராக இல்லை என்றாலும் அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி சமூகத்திற்கு கருத்து சொல்கிறேன் என ஏதாவது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார்.
இதனால் அது சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சண்டை கூட வரும். கடைசியாக கூட மோடி விஷயத்தில் சமூக கருத்துகள் சொல்கிறேன் என பல சிக்கல்களில் மாட்டி சிக்கி தவித்தார்.
அதன் பிறகு வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதற்கு காரணம் ஹிந்தி பிக் பாஸ் சீசன்13 கலந்துகொண்டு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற சித்தார்த் சுக்லா என்பவர் நேற்றையதினம் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.
Targetted hate and harassment. What have we been reduced to? pic.twitter.com/61rgN88khF
— Siddharth (@Actor_Siddharth) September 2, 2021
இந்நிலையில் அவருடைய பெயரும் சித்தார்த் பேரும் ஒரே மாதிரி இருந்ததால் நம்ம சித்தார்த் தான் இறந்துவிட்டார் என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டார்கள்.
இதனை சித்தார்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இலக்கு வெறுப்பு மற்றும் தொல்லை. நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம்? என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.