லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்
கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண முடியாததால் ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள், வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அதிகாலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து லேக் டவுனில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை நட்சத்திர விடுதியில் இருந்தப்படியே மெஸ்ஸி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது இளைய மகன் கலந்து கொண்டனர். அங்கு வருகை தந்த மெஸ்ஸிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.
இருப்பினும் மெஸ்ஸியை அவரது பாதுகாவலர்கள் நன்றாக சூழ்ந்து கொண்டதால், அவரை பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இதனால் அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிலர் கோபத்தில் தண்ணீர் போத்தல்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்திற்குள் தூக்கி எறிந்தனர். சிலர் மைதானத்தின் பாதுகாப்பு எல்லைகளை கடந்து அத்துமீறி நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை சேதப்படுத்தினர்.

Messi’s brief 5-minute appearance sparked chaos at Salt Lake Stadium, West Bengal as angry fans turned violent, throwing bottles, belts, chairs and vandalising hoardings.#Messi𓃵 #GOAT #MessiInIndia
— Sarcasm (@sarcastic_us) December 13, 2025
pic.twitter.com/PwRzP7BDeD
#WATCH | Kolkata, West Bengal: Angry fans resort to vandalism at the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.
— ANI (@ANI) December 13, 2025
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible… pic.twitter.com/TOf2KYeFt9