நடிகர் அஜித்க்கு 100 அடி ஆழத்தில் பதாகை வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
நடிகர் அஜித்தின் திரை உலக பயணத்தின் 30 வது ஆண்டை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் பதாகை வைத்து கொண்டாடியுள்ளனர்.
அத்தோடு அஜித்தின் திரை உலக பயணத்தின் 30 வது ஆண்டை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று நிலையில் நடந்த ஆலோசனையில் கடலுக்கு அடியில் பதாகை வைக்க வேண்டும் என்பது திட்டமாக உருவெடுத்துள்ளது.
அதனை செயல்படுத்துவதற்காக புதுவையில் உள்ள ஸ்கூபா டைவிங் (Scuba diving) பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை அணுகியதோடு அவர்களும் இதற்கு ஆர்வத்தோடு சம்மதிக்க அதற்காக பதாகை தயார் செய்து நேற்று தங்கள் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.
பயிற்சி பெற்ற வீரர்கள் மூவர் கடலுக்கு அடியில் பேனரை எடுத்துக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். சுமார் 100 அடி ஆழத்தில் சென்றதும் இருவர் பேனரை விரித்து பிடித்துக் கொள்ள, ஒருவர் அதனை வீடியோவாகவும் புகைப் படமாகவும் எடுத்திருக்கிறார்.
இந்த செயல் ரசிகர்களின் அதீத ஆர்வத்தை காண்பித்தாலும் அவர்களின் வித்தியாசமான முயற்சி இன்று வெளியான கடலுக்கு அடியில் பேனர் வீடியோவால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.