ஜனனியை காப்பாற்ற களமிறங்கிய ரசிகர் பட்டாளம்! காதல் மன்னன் அசல் கோலார் நீடிப்பாரா?
பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில் கதை சொல்லும் டாஸ்க்கில் சில பேரை அழகாக சேவ் செய்து வைத்துக் கொண்டது பிக் பாஸ் குழு.
இந்நிலையில், நாமினேஷனில் அதிகமாக அசீம் மற்றும் விஜே மகேஸ்வரி பெயர்களைத் தான் ஒவ்வொரு போட்டியாளர்களும் குறையாக சொல்லி நாமினேட் செய்தனர்.
அப்படி நாமினேட் செய்யப்பட்டவர்கள் அசீம், மகேஸ்வரி, அசல் கோலார், ஏடிகே, ஜனனி, ரச்சிதா மற்றும் ஆயிஷா என மொத்தம் 7 பேர் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஜனனி ஆர்மி அதிரடி
எங்க தலைவியை சிறையில் அடைச்சீங்க, இப்போ நாமினேட் பண்றீங்க.. இப்போ பாருங்கடா எங்களோட வெயிட்டை காட்டுறோம் என 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அள்ளி வீசி ஜனனிக்கு வெளியே இருக்கும் மக்கள் பலத்தை இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் காட்ட ரசிகர்கள் போட்டி போட்டு ஜனனிக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரம் முதலில் சேவ் ஆகப்போவது கன்ஃபார்மாக ஜனனி தான் என்று இப்போதைய கருத்துக் கணிப்பில் தெரிகிறது.
அதேபோல அசீம் மற்றும் ஆயிஷா இடையே அப்படி வாடி போடி சண்டையும், செருப்பை கழட்டி காட்டிய சண்டையும் நடந்த நிலையில் தான் பல போட்டியாளர்களும் இருவரையும் மாற்றி மாற்றி நாமினேட் செய்தனர். ஆனால், மக்கள் இவங்க தான் பா ஒழுங்கா சண்டை போட்டு என்டர்டெயின் பண்றாங்க.. இவங்களை எல்லாம் இப்போதைக்கு வெளியே அனுப்ப முடியாது என ஓட்டுக்களை போட்டு வருகின்றனர்.
டேஞ்சரில் உள்ளவர்கள்
கடந்த வாரமே கடைசி இடத்தில் நிற்க வைத்து மரண பயத்தை காட்டிய நிலையில், அழுது புலம்பி நான் வீட்டுக்குப் போறேன் என அடம்பிடித்த மகேஸ்வரி. இந்த வாரமும் கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையிலேயே உள்ளார்.
அவரை விட இன்னும் மோசமாக குறைவான ஓட்டுக்களுடன் ஏடிகே மற்றும் நம்ம கட்டிப்படி வாத்தியார் காதல் மன்னன் அசல் கோலார் அதள பாதாளத்தில் ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து துரத்தி அடிக்கப்படும் இடத்தில் உள்ளார்.
இருவரில் ஒருவர்
நிவாஷினி உடன் காதல் டிராக்கை அசல் போட்டு வரும் நிலையில், ஒருவேளை அவரை பிக் பாஸ் டீம் பிளான் பண்ணி காப்பாற்றினால், இந்த வாரம் பாவமாக பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றி வரும் அந்த இலங்கை ராப் பாடகர் ஏடிகே தான் வெளியேறுவார் என கணிப்புகளில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.